சேப்பாக்கம் மைதானத்தில் ”கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்” பெயரிடப்பட்டது ஏன்? பொன்முடி மகன் கொடுத்த பதில்!
கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் பெயர்க் காரணம் குறித்து அசோக் சிகாமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கலைஞர் கருணாநிதி பெயரை ஸ்டாண்ட் திறக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே கேப்டன் தோனி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி பெயர் ஏன்?
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிக்கு முன்னாள் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்சிஏ கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி கூறுகையில், சேப்பாக்கம் தொகுதியில் நீண்ட காலமாக எம்எல்ஏ-வாக இருந்தவர் கருணாநிதி தான். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 95 சதவிகித போட்டிகளை கருணாநிதி நேரில் உட்கார்ந்து பார்த்துள்ளார்.

கருணாநிதி கொடுத்த நன்கொடை
இந்த மைதானம் கட்டும் போது கருணாநிதி ரூ.15 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளார். அதேபோல் அண்ணா பெவிலியன் என்று ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ஸ்டாண்ட் என்பதால், கலைஞர் கருணாநிதி பெயரை வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதுமட்டுமல்லாமல் ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் தான் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லி, ஒப்புதல் பெற்றுக் கொண்டோம் என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அதேபோல் எம்ஏ சிதம்பரம் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்க பரிசீலனை செய்ததாகவும், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மைதானத்தின் பெயரை மாற்றக் கூடாது என்று அறிவுறுத்தியதாகவும் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் புதிய ஸ்டாண்ட்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் திறக்கப்பட்டால் 38 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணா பெவிலியன்
இதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார். இப்போது கருணாநிதி பெயரிலான ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications