Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கியடிக்கப்படும் செல்வப்பெருந்தகை.. ராகுல் காந்தி பெரிய முடிவு? கையில் லிஸ்ட்? அடுத்த தலை யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என சமீபத்தில் அறிவித்திருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், ராகுல் காந்தியின் உத்தரவின்படி, இவரிடம் ஏற்கனவே ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டுவிட்டது என்பதை நாம் தான் முதன் முதலில் ப்ரேக் பண்ணினோம்.

தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களும், அதன் முடிவுகள் தெரிய 22 நாட்களும் என மிக குறுகிய நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் உறுதியாகத் தெரிவதால், திருநாவுக்கரசு, தங்கபாலு, பீட்டர் அல்ஃபோன்ஸ், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

Congress

கடுமையான மார்ட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை மாற்றத்திற்கான காய்நகர்த்தல்கள் டெல்லியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்தபோது அவருக்குக் கிடைத்த 'புரமோஷன்', இப்போது தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசியல் சூழலில் மறுபரிசீலனை செய்யப்படுவதாக அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. "செல்வப்பெருந்தகை சிறப்பாகச் செயல்பட்டாலும், கூட்டணி கட்சிகளுடனான இணக்கம் மற்றும் உட்கட்சி பூசல்களைக் கையாளும் விதத்தில் மேலிடம் ஒரு 'பேலன்சிங்' மாற்றத்தை விரும்புகிறது" என்பதே சத்தியமூர்த்தி பவனில் நிலவும் தற்போதைய டாக்.

அடுத்த தலைவருக்கான ரேஸில் மூத்த தலைவர்களின் வாரிசுகளும், டெல்லிக்கு நெருக்கமான விசுவாசிகளும் முட்டி மோதி வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளியும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இளம் முகமும் ரேஸில் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. "தலைவர் மாற்றமா அல்லது ஜம்போ கமிட்டியா?" என்கிற குழப்பம் ஒருபுறம் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கட்சியைப் புத்துயிர் பெறச் செய்ய ஒரு 'மேஜர் சர்ஜரி' நிச்சயம் என்கிறார்கள் கதர் சட்டையினர். கை சின்னத்தின் புதிய கேப்டன் யாரென்று இன்னும் சில தினங்களில் மேலிடத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி லாபி

இதற்காக தங்களின் டெல்லி லாபிகளை கடந்த 1 வாரமாக நெருக்கி வருகிறார்கள். இவர்களின் முயற்சிகளை அறிந்துள்ள ராகுல்காந்தி, ''தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றத்தில் உறுதியான சில முடிவுகளை எடுத்திருக்கிறார் '' என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.

நம்மிடம் பேசும் அவர்கள், ''தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்னு செல்வப்பெருந்தகை சொன்னதிலிருந்தே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கனவில் மிதக்கின்றனர். இந்த முறை தலைவர் பதவியை எப்படியாச்சும் கைப்பற்றியாக வேண்டும்னு பகீரத முயற்சியில் இருக்கின்றனர். தேர்தலில் காங்கிரசை ஜெயிக்க வைக்கும் வேலைகளை விட்டுவிட்டுக்கூட, தலைவர் பதவியைப் பிடிக்க ரகசியமாக மூவ் பண்ணி வருகின்றனர்.

ஆனால், இந்த முறை ராகுவ் காந்தி சில விசயங்களில் தெளிவாக இருக்கிறார். திமுகவுடன் நெருங்கிய தொடர்புள்ள, திமுகவிடம் எளிதாக வளைந்து விடுகிற, திமுகவுக்கு ஆதரவாக தலைமையிடம் விவாதிக்கிற நபர்களை தலைவராக்கக் கூடாது என நினைக்கிறார்.

அதேபோல, எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிலிருந்தும் தேர்வு செய்யக்கூடாது எனவும் யோசிக்கிறார் ராகுல். புது முகமாக இருக்க வேண்டும் ; பணத்திற்கு மயங்காதவராக இருக்க வேண்டும் ; 50-55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் என பல கிரிட்டீரீயாக்களை வைத்திருக்கிறார். அதனால் இந்த முறை தலைவர் தேர்வு வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது'' என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.

தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு எல்லாம் சூப்பராகத்தான் ஆலோசிப்பார்கள் ; விவாதிப்பார்கள். இவ்வளவு விசயங்கள் ஆராயப்படுகிறதா? என நாங்கள் எல்லாம் பெருமிதமாக உணர்வோம். ஆனா, கடைசியில், திடீரென ஒருவரை கட்சித் தலைமை அறிவிக்கும். மொத்த எதிர்பார்ப்பும் பொத்தென விழுந்து விடும். இவரை அறிவிக்கவா இவ்வளவு பில்டப் கொடுத்தீங்க என டெல்லி தலைமை மீது கோபம் கோபமாக வரும். இதுதான் வழக்கமாக நடந்து கொண்டிருப்பவை என்று காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுகள் குறித்து விரக்தியாகப் பேசுகின்ற குரல்களும் கதர் சட்டைகளிடம் எதிரொலிக்கவே செய்கின்றன.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+