சூப்பர் CM ஸ்டாலின்; இவரை போல் யாருமில்லை! புகழ்மாலை சூடும் காங்கிரஸ்!
சென்னை: ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி புகழாரம் சூட்டியிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென வரிக்கு வரி புகழ்ந்து கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான சீட் பங்கீடும் இருப்பதாக காரணம் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகழ்மாலை சூடும் வகையில் தமிழக காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புகழாரம்
ஸ்டாலின் தலைமையில் அமைந்த தி.மு.க ஆட்சி மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு நாள்தோறும் பணியாற்றி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஒரு நாள்கூட ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறிய பிரச்சினைகள் முதல் பெரிய பிரச்சினைகள் வரை தெளிவான அணுகுமுறையோடு எதிர்கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

காமராஜரை போல்
ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அதற்கு முன்னுதாரணமாக செயல்படுவதால் வாக்களித்த மக்களின் பாராட்டுதலை விட, வாக்களிக்காத மக்களும் முதலமைச்சரைப் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அன்று காமராஜர் செய்ததை போல் இன்று தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது.

அதிமுக
ஆனால், அ.தி.மு.க. தலைவர்கள் நிவாரணப் பணிகளை விமர்சனம் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாக 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கனமழை பெய்த ஒரு வார காலத்துக்கு அம்மா உணவகத்தின் மூலம் 14 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்தும் பாராட்டும்
இவற்றை எல்லாம் பார்க்கிற போது, கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். அவரது பணி மேலும் சிறப்பாக தொடர கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications