திருமாவை பற்றி பேச பாஜகவின் தடா பெரியசாமிக்கு என்ன தகுதி இருக்கு? சிறுத்தையாய் சீறிய காங். பிரமுகர்!
சென்னை: திருமாவளவனை பற்றி பேசுவதற்கு பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை கேள்வி எழுப்பியுள்ளது.
திருமாவளவனின் பெயரை உச்சரிக்கக் கூட தடா பெரியசாமிக்கு தகுதியில்லை என தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை பாய்ச்சல் காட்டியுள்ளது. விசிகவினரை விட இந்த விவகாரத்தில் சிறுத்தையாய் சீறிய ரஞ்சன் குமார் மேலும் இது குறித்து கூறியிருப்பதாவது;

''விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி விமர்சித்து சுய விளம்பரம் தேட முற்பட்டிருக்கிறார். பட்டியலின மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜகவில் கொத்தடிமை போல் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் தடா பெரியசாமிக்கு. தொல். திருமாவளவனைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?''
''தலித் மக்களுக்காக அரசியல் கட்சியைத் தலைமையேற்று நடத்துவது ஓர் அரசியல்வாதியால் மட்டுமே சாத்தியமானதல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியம். தாழ்த்தப்பட்ட "சேரிக்காரர்கள்" என்று இளக்காரமாகப் பேசப்பட்டிருந்த மக்களைக் கிளர்ந்தெழச் செய்து அவர்களை "சிறுத்தைகள்" என்று மற்றவர்கள் இன்று அழைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறாரே அதுவே மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை தான்.''
''தடா பெரியசாமி போன்ற சுயநலமிகளாக தமது நலன்களுக்காகக் கூடப் போராட முன்வராத கோழைகளாக்கியிருக்கிறது. அவர்கள் தமது சுயநலத்தை மறைத்துக்கொள்ள தமது சமூகத்தையே கேவலமாகப் பேசவும். தமக்காகப் போராட முன்வரும் அரசியல் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தவும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தவும் முனைகின்றனர்.''
''தொல்குடி மக்களை ஒன்று திரட்டி அவர்களை ஓர் அரசியல் சக்தியாக உருவாக்கி சாதனை படைத்தவர் தொல். திருமாவளவன். சனாதனம் என்ற சொல்லாடலை தமிழ்நாட்டில் பிரபலமாக்கியவர். இன்றைக்கு இந்தியா முழுவதும் சனாதன எதிர்ப்பு சென்றடைந்ததற்கு திருமாவளவனே காரணம். பட்டியலின, பழங்குடியின மக்களை மீண்டும் அடிமைப்படுத்தத் துடிக்கிறது பாஜக. கல்வி, வேலை வாய்ப்புகளில் அரசியல் சாசனம் வழங்கிய இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. ''
''இதெல்லாம் தடா பெரியசாமிக்கு தெரியாதா? இல்லை, பதவிக்காக பட்டியலின மக்களின் நலனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டாரா? தடா பெரியசாமிகளைப் போல் பதவிக்காக மண்டியிடுபவர் அல்ல திருமாவளவன். பட்டியலின மக்கள் மட்டுமின்றி இதர பிற்படுத்தப்பட்டோர் நலன். சிறுபான்மையினர் நலன்களிலும் அக்கறை செலுத்தி. இன்றைக்கு ஒட்டுமொத்த மக்களின் தலைவராக உருவெடுத்திருக்கிறார். அவர் பெயரை உச்சரிக்கக்கூட தடா பெரியசாமிக்கு தகுதியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications