பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப்.. எப்போது கலந்தாய்வு?
சென்னை: தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2026 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். இதில் 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூலை 13 ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது எனவும், ஜூலை 20 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
பொறியியல் தரவரிசையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷிதா 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சுமார் 2.5 லட்சம் பேர் பதிவுக் கட்டணம் செலுத்திய நிலையில் மாணவர் சேர்க்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணவர்கள் - 1,30,767 பேர், மாணவிகள் - 1,05,246 பேர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 50,494 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications