நாளை முதல்.. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மிகப்பெரிய புரட்சி.. இபியில் நடந்த அதிரடி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் புதிய வீட்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
நாளை முதல் 4 கிலோவாட் வரையிலான குறைந்த அழுத்த ஒற்றை கட் வீட்டு மின் இணைப்புகளுக்கு, இனி மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு TNPDCL பகிர்மானப் பிரிவு இயக்குநர் எல். லீனா விரிவான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பு
தற்போதைய நடைமுறையின்படி, புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட பகுதி மின்வாரியப் பொறியாளர்கள் அல்லது களப்பணியாளர்கள் விண்ணப்பதாரரின் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே மதிப்பீடு மற்றும் இணைப்பு வழங்கும் பணிகள் தொடங்கும். இதனால் விண்ணப்பதாரர்களுக்கு காலதாமதம் ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சலும் நிலவி வந்தது.
இனிவரும் காலங்களில், கூடுதல் கம்பங்கள் நடுவது அல்லது மின்வழித்தடத்தை நீட்டிப்பது போன்ற கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் (தேவைப்படாத எளிய 4 kW வரையிலான வீட்டு இணைப்புகளுக்கு நேரடி ஆய்வு ரத்து செய்யப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி? புதிய நடைமுறைகள்:
முழுக்க முழுக்க ஆன்லைன்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை TNPDCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்தால் போதுமானது.
கடித நகல்கள் தேவையில்லை: இணையதளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, அதன் நகல்களை மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
புவியியல் குறியீடு: விண்ணப்பிக்கும் போது, மின் இணைப்பு தேவைப்படும் இடத்தின் சரியான புவியியல் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்களை இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.
GIS சிஸ்டம் மூலம் சரிபார்ப்பு: விண்ணப்பதாரர் வழங்கும் இடத்தின் தகவல்கள், TNPDCL-ன் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் தானாகவே சரிபார்க்கப்படும்.
மின் இணைப்பு வழங்கும் செயல்முறை
ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் GIS தொழில்நுட்ப சரிபார்ப்பு ஆகியவை வெற்றிகரமாக முடிந்தவுடன், விண்ணப்பம் உடனடியாக அடுத்தகட்ட மதிப்பீட்டு நிலைக்கு நகரும். அங்கு கட்டண விவரங்கள் உறுதி செய்யப்பட்டு, மிக விரைவாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேசமயம், விண்ணப்பதாரர் வழங்கும் இடத்தின் விவரங்களை GIS சிஸ்டம் மூலம் டிஜிட்டல் முறையில் உறுதிப்படுத்த முடியாவிட்டால் அல்லது கூடுதல் மின் கட்டமைப்புப் பணிகள் தேவைப்பட்டால், அத்தகைய விண்ணப்பங்கள் வழக்கம் போல் மின்வாரிய ஊழியர்களின் நேரடி ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.
எப்போது அமலுக்கு வரும்
இந்த புதிய முறை உடனே அமலுக்கு வர உள்ளது. நாளை முதல் 4 கிலோவாட் வரையிலான குறைந்த அழுத்த ஒற்றை கட் வீட்டு மின் இணைப்புகளுக்கு, இனி மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் இணைப்புகள் பெறுவது இனி எளிதாகும்.


Click it and Unblock the Notifications
