சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பராமரிப்பு பணி மேற்கொள்ள.. மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு - மின்சார வாரியம்

Google Oneindia Tamil News

சென்னை: மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

TNEB has issued an order allocating Rs. 5 lakh for each consignment to carry out maintenance work at power stations

மின் நிலையங்களில் கடந்த 9 மாதங்களாக முறையான பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படட்டுள்ளது. இந்த மின்வெட்டை தடுக்க 10 நாட்கள் தீவிர பராமரிப்பு பணியை மேற்கொள்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். இந்த பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கும் 3 நாட்களுக்குள் இணைப்பு வழங்கிட வேண்டும். நுகர்வோரின் குறைகளுக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். எந்த விண்ணப்பத்தையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. நுகர்வோரின் குறைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு வழங்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

English summary
The Tamil Nadu Electricity Board has issued an order allocating Rs. 5 lakh for each consignment to carry out maintenance work at power stations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X