சில நாட்களில் பொது தேர்வு.. மின்வாரியம் அதிரடி உத்தரவு! தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்
தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை: பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கோடைக் காலம் வந்துவிட்டாலே மின்சார பயன்பாடு அதிகரித்துவிடும்.. கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால், குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும். இதன் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படும்.@

பொதுத்தேர்வு
இதே மார்ச் ஏப்ரல் காலகட்டத்தில் தான் பொதுத்தேர்வுகளும் நடைபெறும். அதன்படி தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை மின்வாரியம் கடந்த நவ. மாதமே அறிவித்துவிட்டது.

அட்டவணை
அதேபோல, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது. +1 மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. +1,+2 மாணவர்களுக்குத் தேர்வு முடிந்த பிறகு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

மின்வாரியம்
பொதுத்தேர்வு தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில், மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இதற்கான வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதனிடையே பொதுத்தேர்வு குறித்தும் தேர்வு மையம் குறித்தும் மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தடையில்லா மின்சாரம்
அதன்படி, பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேர்வு எழுதும் சமயத்தில் மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்க தேவையான முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான ஊழியர்களைத் தயார் நிலையில் வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications