சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள் துப்பட்டா உடன் சுடிதார் அணியலாம்.. சீருடை விதிகளை மீறினால் நடவடிக்கை - மின்வாரியம் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை : மின் வாரிய பணியாளர்களுக்கான சீருடை விதிகளை வெளியிட்டு, அதனை அனைத்து பணியாளர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வரக்கூடாது என்றும், பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா? அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?

ஆண்கள் வேட்டி அல்லது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து வரலாம் என்றும் மின் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம்

மின்சார வாரியம்

மின் வாரிய பணியாளர்களுக்கான சீருடை விதிகளை அனைத்து பணியாளர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சீருடை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின் வாரியம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

துப்பட்டாவுடன் சுடிதார்

துப்பட்டாவுடன் சுடிதார்

அதன்படி, பணியின்போது கேஷுவல் உடை அணிந்திருக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், சேலை, சல்வார் மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், ஃபார்மல் பேண்ட், வேட்டி மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லைட் கலர்

லைட் கலர்

உடையின் நிறமும், டிசைனும் லைட்டாக இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை லைட்டான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை போன்றவற்றை அணியலாம். அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கோட் அணியவேண்டும்

கோட் அணியவேண்டும்

நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக்கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும். பட்டன் இல்லாத கோட் அணிய ஊழியர் விரும்பினால் கண்டிப்பாக டை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Tamil Nadu Electricity Board ordered all employees to abide by the dress code. Also directed that, Women may wear saree, churidar with dupatta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X