மின்சார வாரியம் குட் நியூஸ்! காலி இடத்தை வாடகைக்கு விட்டு லட்சங்களில் சம்பாதிக்கலாம்! மெகா கொள்முதல்
சென்னை: தமிழக மின்சார வாரியம், பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.. அத்துடன் மின் திருட்டு போன்ற முறைகேடுகளைக் களைவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. அதை பற்றின செய்திகள்தான் தற்போது வெளியாகி உள்ளன..
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மின்சாரத்தின் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அதனைத் தடையின்றி வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது..

மின்சார வாரியம் குட் நியூஸ்
குறிப்பாக மாலை நேரங்களில் ஏற்படும் உச்சகட்ட மின் தேவையை சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து 1500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வாரியம் திட்டமிட்டுள்ளது..
இதன் மூலம் கோடையில் ஏற்படும் மின்வெட்டு அபாயத்தைத் தவிர்த்து பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மின்சார வாரியம் முழு வீச்சில் தயாராகி வருகிறது..கோடைகால மின் தேவையை சமாளிக்கவும் மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வாரியம் எடுத்து வரும் இந்த முயற்சிகள் நுகர்வோருக்கு பெரும் பயனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
அதேபோல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதில் மின்சார வாரியம் ஒரு புதிய குட் நியூஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
இ-சார்ஜிங் மையங்கள்
நகர்ப்புறங்களில் 3 கிலோமீட்டர் தொலைவிற்கும் நெடுஞ்சாலைகளில் 25 கிலோமீட்டர் தொலைவிற்கும் ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்பட உள்ள நிலையில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க தனியார் நில உரிமையாளர்களை ஒருங்கிணைக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது..
இந்த வெப்சைட் மூலம் நில உரிமையாளர்களும் சார்ஜிங் மையம் அமைக்க விரும்பும் நிறுவனங்களும் நேரடியாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும் என்பதால் நில உரிமையாளர்களுக்கு வாடகைப் வருமானம் கிடைப்பதோடு வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற சார்ஜிங் வசதியும் மிக விரைவில் கிடைக்கப் போகிறது..
மின் திருட்டு அதிரடி
இப்படிப்பட்ட சூழலில், மின் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மின்சார வாரியம் ஒரு மிகப்பெரிய விஷயத்தை வெளியே அம்பலப்படுத்தி உள்ளது.. அதாவது சென்னை ஆவடி பகுதியில் மின் வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தி உள்ளது.
இந்த கூட்டு ஆய்வில் 11 இடங்களில் மின் திருட்டு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு சுமார் 8.78 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.. இதில் பிடிபட்ட நுகர்வோர் தங்களது தவறை ஒப்புக்கொண்டு சமரசத் தொகையாக 36 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியதால் அவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது..
மின் திருட்டு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக தனி அலைபேசி எண்ணையும் அறிவித்துள்ள மின்சார வாரியம் முறைகேடுகளைத் தடுப்பதில் சமரசமற்ற போக்கை கடைபிடித்து வருகிறது.. இப்படி தமிழக மின்சார வாரியம், ஒருபுறம் கடகடவென சேவைகளை மேம்படுத்தியும் மறுபுறம் முறைகேடுகளை ஒடுக்கியும் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications