மின் மீட்டர்..என்ன விலைக்கு எங்கு வாங்கலாம்? மின்சார வாரியம் வெளியிட்ட மின் மீட்டர்கள் பாக்ஸ் லிஸ்ட்
சென்னை: மீட்டர் கொள்முதல் செய்வதற்கான தனியார் நிறுவனங்களின் பட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது... அதில், எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து மீட்டர் வாங்க வேண்டும், அதன் விலை உள்ளிட்ட விபரங்களை, தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
வீடுகள், கடைகள், உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் மீட்டர்களை, மின் வாரியமே அமைத்து தருவது வழக்கமாகும்.. புதிய மின்இணைப்புகளை பெறும்போது, மின்வாரியமே இந்த இணைப்புக்கு மீட்டரை பொருத்தி விடுகிறது. இதற்காக, நுகர்வோரிடமிருந்து மின்இணைப்புக் கட்டணம் தனியாக வசூலிக்கிறது.

மின்வாரிய அலுவலகம்: இருந்தாலும், சில சமயங்களில் மின்வாரிய அலுவலகங்களில் மீட்டர் இருந்தாலும் விண்ணப்பதாரர்களிடம் மீட்டர் இல்லை என சில ஊழியர்கள் சொல்லிவிடுகிறார்களாம். இதனால், விண்ணப்பதாரர்கள் பெரிதும் அலைக்கழிப்புக்கு ஆளாவதாக சொல்கிறார்கள்.. மேலும் இதனால், மின்இணைப்பு பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது..
அத்துடன், மின்வாரியத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அதனால்தான், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பொதுமக்கள் புதிய மின்இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது ஒரு முனை மற்றும் மும்முனை மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற விபரம் மின்வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கியாரண்டி: இதன்படி, கேப்பிட்டல் பவர் சிஸ்டம்ஸ் (மொபைல் எண்: 87544 45464), ஹோலி மீட்டர்ஸ் இந்தியா (98153 92255, 93820 07138), எச்பிஎல் எலக்ட்ரிக் அண்ட் பவர் லிமிடெட், (98400 56522), லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (89396 87313), ஷினீடர் எலக்ட்ரிக் இந்திய பிரைவேட் லிமிடெட் (98402 17054), செக்யூர் மீட்டர் லிமிடெட் (97909 77033) ஆகிய தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டரை நுகர்வோர் கொள்முதல் செய்துக் கொள்ளலாம்.
மேலும், தாழ்வழுத்த பிரிவில் மீட்டர் விலை குறைந்தபட்சம் ரூ.900 முதல் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரையிலும், உயரழுத்த பிரிவில் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மீட்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து வாங்கப்படும் மீட்டர்கள் அதற்கான உத்தரவாத (கியாரண்டி) காலத்துக்குள் பழுதடைந்தால், சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலக அதிகாரி அதை கழற்றி நுகர்வோரிடம் வழங்க வேண்டும்.
புதிய மீட்டர்கள்: அதை நுகர்வோர், தான் வாங்கிய விநியோகஸ்தரிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர் பழுதடைந்த மீட்டரை 7 நாட்களுக்குள் மாற்றி தர வேண்டும். புதிய மீட்டரை பெற்ற நுகர்வோர் அதை பிரிவு அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அந்த மீட்டரை பரிசோதித்து, சீலிட்டு வழங்குவார். அதன் பிறகு அந்த மீட்டரை நுகர்வோர் பொறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்கள் வாங்க வேண்டும், அவற்றின் விலை விபரங்களை, மின் வாரியம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மீட்டர்களை பரிசோதித்து ஊழியர்களும் இனி பொருத்துவார்கள் என்பதால், இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications