வீட்டு வசதி வாரியம்..குலுக்கல் முறையில் வீட்டுக்கு 15 நாள் கூடுதல் அவகாசம்! தமிழக அரசின் நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் இப்போது சூப்பர் சான்ஸ் ஒன்றை தந்துள்ளது.. குறைந்த விலையில் கிடைக்கும் குடியிருப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.. ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.. வீடுகள் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கப்படுகின்றன.. இதை பற்றி ஒரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது...!!

வீடு என்பது நம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகப்பெரிய கனவாகும்.. சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதிக விலை காரணமாக, பலரால் அதை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.

TNHB Lottery Homes Housing Board

வீட்டுவசதி வாரியம் அதிரடி

இதுபோன்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவதுதான் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளை உருவாக்கி வழங்குவது வீட்டுவசதி வாரியத்தின் நோக்கமாகும்.

அரசு ஊழியர்கள், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் குடியிருப்புகளை அமைத்து விற்பனையும் செய்து வருகிறது.

ஒரு திட்டத்தில் விற்பனைக்காக இருக்கும் வீடுகள் அல்லது மனைகளின் எண்ணிக்கையைவிட விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், யாருக்கு அந்த வீடு அல்லது மனை ஒதுக்கப்படும் என்பதில் வெளிப்படைத்தன்மை இருப்பது முக்கியம்.

குலுக்கல் முறையில் தேர்வு

அதுக்காகத்தான் தகுதியான விண்ணப்பதாரர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்கிறார்கள். இதனால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் சாதகமாக முடிவு எடுக்க சான்ஸ் இல்லை.. அத்துடன் தகுதியானவர்களுக்கு சமமான வாய்ப்பும் கிடைக்கும்... இப்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மேற்கொண்டுள்ள பல்வேறு குடியிருப்பு திட்டங்களிலும் இதேபோல் ஆன்லைனில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

இதற்காக விற்பனைக்கு உள்ள குடியிருப்பு அலகுகள் தொடர்பாக முன்னணி நாளிதழ்களில் வீட்டுவசதி வாரியம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தக் குடியிருப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு

ஒவ்வொரு குடியிருப்பு திட்டத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுகள் செப்டம்பர் 26-ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் உள்ளன. பொதுமக்களிடமும் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வீட்டுவசதி வாரியம் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது... அதாவது ஏற்கனவே விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள், இன்னும் விண்ணப்பிக்க ஆர்வமாக இருப்பவர்கள் என அதிகமானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

15 நாட்கள் கால அவகாசம்

அதன்படி, ஒவ்வொரு குடியிருப்பு திட்டத்துக்கும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியில் இருந்து மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

இதனால் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகளை வாங்க விரும்பும் பொதுமக்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது... குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து, குலுக்கல் முறையில் நடைபெறும் ஒதுக்கீட்டில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnhb.tn.gov.in மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+