TNPSC Annual planner: டிஎன்பிஎஸ்சி 2026.. கால அட்டவணை வெளியானது.. குரூப் 4 தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் வகையில் Annual planner வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இதில், குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் வகையில் Annual planner ஐ டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆண்டு கால அட்டவணையை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்விவரம் வருமாறு;
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்)- அறிவிக்கை வெளியிடப்படும் நாள்; 23.06.2026- தேர்வு நடைபெறும் நாள்; 06.09.2026
* ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026 -தேர்வு நடைபெறும் நாள்; 20.09.2026
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்): தேர்வு அறிவிக்கை நாள்; 11.08.2026-தேர்வு நடைபெறும் நாள்; 25.10.2026
* ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்-31.08.2026.. தேர்வு நடைபெறும் நாள்:14.11.2026
* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்) தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் நாள் 06.10.2026- தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2026
குறிப்பு:
தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும்.
-
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications