ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தரவரிசை பட்டியல்.. திடீரென ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துள்ள டிஎன்பிஎஸ்சி, இப்போது திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இருப்பினும், இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் அதை ரத்து செய்துவிட்டு புது திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

TNPSC cancelled rank list for combined engineering services examination and released revised rank

இது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண்.10/2022, நாள்: 04.04.2022-இன் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் (Combined Engineering Services Examination) அடங்கிய பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் (Revised Rank List) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மறு கலந்தாய்வு (Recounselling dates) 03.02.2024 மற்றும் 04.02.2024 ஆகிய இரண்டு நாட்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண்.682- 687/2023 மற்றும் வழக்கு எண்.7412/2023, நாள் 20.11.2023-ல் வழங்கிய பொது இறுதியாணையின் அடிப்படையில், முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் அத்தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெரிவு ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கூறிய மறுகலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியாகத் தபால் மூலமாக அனுப்பப்படமாட்டாது எனவும், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும் எனவும், திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மறுகலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறும் பட்சத்தில் மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+