மார்க் போச்சே.. கதறிய தேர்வர்கள்.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் என்ன நடந்தது? ஏன் இத்தனை குழப்பம்?
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இதனால் நேற்று மாலை 7.30 மணி வரை தேர்வு நடக்கும் சூழல் ஏற்பட்டது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் நேற்று தமிழ்நாடு முழுக்க நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வர்கள் பலரும் கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள்.
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் குரூப் 2, 2ஏ தேர்வு நேற்று நடந்தது. 2019க்கு பின் இந்த தேர்தல் நடப்பதால் பலர் இந்த தேர்வில் நேற்று ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுக்க தற்போது காலியாக உள்ள 5,446 பதவிக்கு நடக்கும் தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினர். கடும் போட்டி உள்ளதால் பல ஆண்டு படித்துவிட்டு இந்த தேர்வை எழுத தேர்வர்கள் வந்து இருந்தனர். அப்படி வந்த தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக பல சம்பவங்கள் நேற்று நடந்தன.

வினாத்தாள் எண் குளறுபடி
நேற்று தேர்வர்களை குழப்பிய முதல் விஷயம் வினாத்தாள் எண் குளறுபடி. பொதுவாக ஒவ்வொரு அறையிலும் இருக்கும் தேர்வர்களுக்கு என்று வினாத்தாள் கொடுக்கப்படும். அந்த தேர்வறையில் தேர்வு எழுத போக தேர்வர்களின் ரோல் நம்பர் லிஸ்டில் இருக்கும். அதே ரோல் நம்பர் கொண்ட வினாத்தாள்தான் கொடுக்கப்படும். இந்த வினாத்தாளில்தான் பதில் எழுத முடியும். ஆனால் நேற்று பல்வேறு தேர்வறைகளில் இந்த வினாத்தாள் மாறி மாறி சென்று உள்ளது. அதாவது வினாத்தாள் பண்டில் மாறி சென்றுள்ளது. இதனால் சில மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தாமதம்
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பலருக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள்கள் திருப்பி வாங்கப்பட்டு உள்ளன. பலருக்கும் இன்னும் வினாத்தாள்கள் வாங்கப்படவில்லை. இதனால் பலருக்கு நேரம் தாமதம் ஆகி உள்ளது. எந்தெந்த மையங்களில் எவ்வளவு தாமதம் ஏற்பட்டு இருக்கிறதோ அவ்வளவு நேரம் கொடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. அதன்படியே தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

குழப்பம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இதனால் நேற்று மாலை 7.30 மணி வரை தேர்வு நடக்கும் சூழல் ஏற்பட்டது. தேர்வர்கள் பலருக்கும் தாமதமாக வினாத்தாள் வந்ததால் பிற்பகல் முடிய வேண்டிய தேர்வு 7.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வில் தேர்வர்கள் பலரும் கடுமையாக சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில்தான் இதை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பச்சையப்பா, காயிதே மில்லத், தஞ்சாவூர், கடலூர் தேர்வு மையங்களில் தேர்வு முடிய மிக நேரம் ஆகி உள்ளது. இந்த நேர தாமதம் காரணமாக தேர்வர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போய் இருக்கிறது.

கண்காணிப்பாளர்கள்
இந்த குழப்பம் காரணமாக கவனம் சிதறிய கண்காணிப்பாளர்களை பயன்படுத்தி சில தேர்வர்கள் போனை பயன்படுத்தி தேர்வு எழுதியதாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு சிலர் தங்களின் ரோல் நம்பரை பார்க்காமல் வினாத்தாளை வாங்கி அதில் விடை எழுதி உள்ளனர். இந்த வினாத்தாளை அவர்களிடம் வாங்கி அந்த ரோல் நம்பருக்கு உரியவர்களிடம் கொடுத்துள்ளனர். இதில் தவறான பதில்களை அடித்துவிட்டு எழுதும்படி கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் ஒரு பக்கத்தில் விடையை அடித்துவிட்டு எழுதினால், அந்த பக்கத்திற்கு மட்டும் 2 மார்க் குறைக்கப்படும். இப்படி வேறு யாரோ எழுதிய விடையை அடித்துவிட்டு எழுதுவதால் எங்களின் மார்க்தான் போகிறது என்று தேர்வர்கள் கதறி உள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications