Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று குரூப் 1, குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு.. 72 இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் போட்டி.. விதிகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கவுள்ளது. மொத்தமாக 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் தேர்வர்கள் போட்டி போடுகின்றனர். இதற்காக 44 மையங்களில் 987 கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை ஆட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

TNPSC Group 1 Exam Jobs

72 பணியிடங்கள்

இந்த குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் குரூப்-1 பிரிவில் 70 காலி பணியிடங்களுக்கும், குரூப்-1ஏ பிரிவில் 2 இடங்களுக்கும் இன்று தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் நாளை நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அவர்களில் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6,465 பேரும் எழுதுகின்றனர்.

8.30 மணிக்குள் வர வேண்டும்

சென்னை மையத்தில் மட்டும் தேர்வெழுத 41 ஆயிரத்து 94 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். தேர்வர்கள் இன்று காலை 8.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதி சீட்டுடன் வர வேண்டும். 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எந்தக் காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிகள் என்ன?

இதனால் தேர்வர்கள் முன்கூட்டியே வீட்டில் இருந்து தேர்வு வளாகத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுடன் வர வேண்டும். அப்படி வரத் தவறினால், அவர்கள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டுவர வேண்டும்.

அனுமதி கிடையாது

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், ப்ளூ டூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12.30 மணிக்கு முன்பாக தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+