ஜிஎஸ்டி, வாட்டர் ஹீட்டர்! டிஎன்பிஎஸ்சியில் கேட்ட கேள்விக்கு உங்களால் சரியாக விடை அளிக்க முடியுமா?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் ஜிஎஸ்டி குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது எளிதான கேள்வி என்றாலும் நன்கு யோசித்து வொர்க் அவுட் செய்தால் இதற்கான விடை உடனடியாக கிடைத்துவிடும். அதிலும் டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளில் சில கேள்விகள்தான் கணக்கு பாடத்தில் இருந்து வரும் என்பதால் நேரம் விரயமாகாது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர் முதல் விஏஓ வரை பல துறைகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 இல் தொடங்கி 8 குரூப் வரை காணப்படுகிறது. இதில் நேற்று முன் தினம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது.
இதில் prelims எனப்படும் முதல்நிலை தேர்வும் mains எனப்படும் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது. நேற்று முன் தினம் நடந்த முதல் நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 797 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று முன் தினம் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், 20 மூன்றாம் பாலினத்தவரும் இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வை எழுதினர். இந்த தேர்வில் பொது அறிவில் 175 கேள்விகளும், மென்ட்டல் மேத்ஸில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு 300 மதிப்பெண்கள் ஆகும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை.
இந்த தேர்வில் நடப்பு நிகழ்வுகள் குறித்தும் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை பார்ப்போம்.
A water heater is sold by a trader for Rs 10502 including GST at 18%. Find the GST of the Water heater.
தமிழில்
வணிகர் ஒருவர் ஒரு தண்ணீர் கொதிகலனை 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ரூ 10,502 க்கு விற்றார். தண்ணீரின் கொதிகலனின் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க
A) ரூ 1,802 B) ரூ 1,602 C) ரூ 1620 D) ரூ 1,820 E) விடை தெரியவில்லை
விடை :B) ரூ. 1602
இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த விடை எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.
Selling price S.P= 10,502
SP = Marked price + GST
M.P= x
18% of MP= 18/100 *x
SP= MP+GST
= x+ 18/100 *x
10502 = 100x+18x/100
10,502* 100= 118x
x= 10502*100/118
x= 8900
Marked Price = Rs 8900
GST = 18/100 * 8900
GST = Rs. 1602
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications