டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. வந்தாச்சு அறிவிப்பு! துணை ஆட்சியர், டிஎஸ்பி ஆகலாம்.. செம சான்ஸ்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்பட 8 உயர் பதவிகளுக்கான தேர்வுக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு உரிய அறிவிப்புகள் வெளியிட்டு போட்டி தேர்வினை நடத்துகிறது. அரசு பணி கனவுடன் தமிழகத்தில் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கன அறிவிப்பினை எதிர்நோக்கி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

தேர்வர்களின் வசதிக்காக ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதாத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான், 70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள் விவரம்:
துணை ஆட்சியர்: 28
துணை காவல் கண்காணிப்பாளர்: 07
உதவி ஆணையர்: 19
உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி: 07
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்: 03
உதவி ஆணையர்: 06
என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி;
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 அன்று தேர்வர்கள் அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயதான 21 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். துணை ஆட்சியர், உதவி ஆணையர், உதவி ஆணையர் வணிகள் வரிகள் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும்.
துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், உதவி ஆணையர் (தொழிலாளர்) உள்ளிட்ட பதவிகளுக்கு 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீட்டு பிரிவினவருக்கு வயது உச்ச வரம்பில் சலுகைகள் உண்டு.கீழே கொடுக்கபப்ட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களை பார்த்துக்கொள்ளலாம்.
தேர்வு முறை:
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகம் முழுக்க முக்கிய நகரங்களில் முதல்நிலை தேர்வு நடைபெறும். 44 நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20I%20notification_Tamil_.pdf
தேர்வுக் கட்டணம்:
தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் முதல்நிலைத் தேர்விற்கு தேர்வுக் கட்டணமாக ரூ.100/-(ரூபாய் நூறு மட்டும்) இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது செலுத்த வேண்டும். முதல் நிலைத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வுக் கட்டணச் சலுகை கோராத நிலையில், முதன்மை எழுத்துத் தேர்விற்கான கட்டணமாக ரூ.200/- (இரு நூறு ரூபாய் மட்டும்) செலுத்த வேண்டும்.
தேர்வு எப்போது நடைபெறும்
"குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.












Click it and Unblock the Notifications