வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://tnpsc.gov.in எனும் இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
தமிழக அரசு பணிக்கான ஆட்சேர்ப்புகளை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்புவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி துணை கலெக்டர் பணிக்கு 18 பேர், துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கு 26 பேர், வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25 பேர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பணிக்கு 13 பேர், கிராமப் மேம்பாட்டு உதவி இயக்குனர் பணிக்கு 7 பேர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 பேர் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து 2022 நவம்பர் மாதம் 19ம் தேதி முதன்மை தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து 5 மாதம் ஆன நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டது.
குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்வானவர்கள் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 நாட்களாக நேர்காணல் நடந்தது. நேர்க்காணல் முடிவடைந்த நிலையில் இன்று மாலையில் குரூப் -1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு முடிவை பார்க்க விரும்புவோர் https://tnpsc.gov.in எனும் இணையதளம் மூலம் பார்க்கலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications