டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் முக்கிய அப்டேட்! குரூப் 1 மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி பதிவிறக்கம் செய்யலாம்? ஹால் டிக்கெட் பெறும் இடங்கள் என்னென்ன? இறுதி பட்டியல் எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது.

Group 1 Main Exam TNPSC Hall ticket 1

இந்த தேர்வுக்கான முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15ம் தேதி நடந்து முடிந்தது.. இந்த தேர்வை 1 லட்சத்து 86,128 பேர் மட்டுமே எழுதினார்கள்..
இந்நிலையில்தான், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7லிருந்து 15 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்நிலை தேர்வுக்கான ரிசல்டை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 28ல் வெளியிட்டது. தற்காலிகமாக 1843 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) வருகிற 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இதன் மெயின் தேர்வு சென்னை மையங்களில் மட்டும் நடைபெறும். குரூப் 1, 1A பணிக்கான மெயின் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களிள் தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in, tnpscexams.inல் வெளியிடப்பட்டுள்ளது.
.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "04/2025 (01.04.2025) மற்றும் 05/2025 (04.2025) வாயிலாக நேரடி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-A (தொகுதி-IA பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று முற்பகல் நடைபெற்றது.

இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 முற்பகல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் www.tnpscexams.gov.in மற்றும் www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பதிவிறக்கம் செய்வது?

- www.tnpscexams.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும்

- முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட்டிற்கான லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்

- தேர்வர்களின் OTR விவரங்கள் பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும்

- ஹால் டிக்கெட்டிற்கு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால்டிக்கெட் விவரம்

ஹால் டிக்கெட்டை லிங்கை Exam Dashboard மற்றும் OTR Dashboard மூலமும் பெறலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம், தேதி, நேரம், தேர்வு தாள் ஆகிய விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.. அத்துடன் தேர்வின் விதிமுறைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இடம்பெற்று இருக்கும். ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, நேர்முகத் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியாகும். அவர்களுக்கு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு நடைபெற்று அதற்கு பிறகே இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+