57 நாட்களில் வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள்.. அடுத்து என்ன? ஹாட் நியூஸ்!
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 190 பேரின் பட்டியலை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, 90 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடம், போலீஸ் டிஎஸ்பி- 23, வணிகவரித் துறை உதவி ஆணையர்- 14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

குரூப் 1 முதன்மைத் தேர்வு
அதைத்தொடர்ந்து, குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 10 முதல் 13 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின்ஸ் தேர்வு நடைபெற்றது. முதன்மைத் தேர்வினை எழுத, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,888 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 57 நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரிசல்ட் வெளியீடு
தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Physical Certificate Verification and Oral Test) வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு வரும் 07.04.2025 தேதி முதல் 09.04.2025 தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் குறித்த தனிப்பட்ட தகவல் தேர்வாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை நேரடியாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
குரூப் 1 மெயின்ஸ் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
1. குரூப் 1 தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. அதில் முகப்பு பக்கத்தில் "Important Links" என்பதில் "Latest Results" என்று இருப்பதை க்ளிக் செய்யவும்.
3. GROUP- I SERVICES (Notification No : 04/2024) என்று உள்ளதை க்ளிக் செய்யவும்.
4. அதில் 14.03.2025 தேதியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் PDF வடிவில் கிடைக்கும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவியில் பணி பெற காத்திருப்பவர்களுக்கு அடுத்தபடியாக 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. மீண்டும் குரூப் 1 தேர்வு எழுத விரும்புகிறவர்களும், அரசு பணிக்காக தங்களை தயார்படுத்தி வருபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications