ஒன்னுமே புரியலங்க.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட 'டைம் கேள்வி'.. விடை என்னன்னு சொல்லுங்க
சென்னை: குரூப் 2 தேர்வு இன்று நடந்து முடிந்தது. இந்த தேர்வு சற்று கடினமானதாக இருந்ததாக சில தேர்வர்களும், எதிர்பார்த்தது போலவே இருந்தது அந்த அளவு கடினமானதாக இல்லை என்று சில தேர்வர்களும் கூறினர். இதனிடையே, குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட 'மணி கணக்கு' தொடர்பான கேள்வி தேர்வர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிர்ப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்வர்களை தேர்வு செய்து வருகிறது. தமிழக அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் குரூப் தேர்வுகளை எழுதி பணியில் சேர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் உள்ள 507 காலிப்பணியிடங்கள், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2 ஏ பதவிகளில் உள்ள 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் வௌியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,763 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 75,185 பேர் தேர்வு எழுதினார்கள். சென்னையில் 251 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கு முன்பே வந்துவிட்டனர்.
9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் தாமதமாக வந்த தேர்வர்கள் கண்ணீருடன் திரும்பி சென்றனர். தேர்வு எழுதியவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை பின்பற்றி தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான சாதனங்களை தேர்வு மையத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் பலத்த கண்காணிப்புடன் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. குரூப் 2 தேர்வு சற்று கடினமானதாக இருந்ததாக சில தேர்வர்களும், எதிர்பார்த்தது போலவே இருந்தது அந்த அளவு கடினமானதாக இல்லை என்று சில தேர்வர்களும் கூறினர். இதனிடையே, குரூப் 2 தேர்வில் கேக்கப்பட்ட 'மணி கணக்கு" தொடர்பான கேள்வி தேர்வர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கேள்வி வருமாறு:- கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னமே சுனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார். அங்கு கூட்டம் தொடங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்துவிட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதாக வந்தடைந்தார். எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
Reaching the place of meeting 20 minutes before 8.50 hrs, sunil found himself thirty minutes earlier than the man who came 40 minutes late. what was the schedule time of the meeting?
A) 8.00 ; B) 8.05: C) 8.10: D) 8.20
இந்த கேள்விக்கான விடை என்னவென்று தேர்வர்கள் சமூக வலைதளங்களில் விவாதிட்டு வருகிறார்கள். இந்த கேள்வி ஆங்கிலத்தில் சரியாக உள்ளது எனவும் தமிழ் மொழி பெயர்ப்பு சரியில்லை என சில தேர்வர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். இந்த கேள்விக்கான விடையை கண்டுபிடித்து சரியான விடையை கமெண்டில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications