TNPSC Group 2: தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. டிஎன்பிஎஸ்சி தலைவர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மேலும் 9,725 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இந்து சமய அறநிலையத்துறையில் செயல்நிலை அலுவலர், தணிக்கை அலுவலர், சார்பதிவாளர் நிலை 2, நன்னடத்தை அலுவலர் உள்ளிட்டவை அடங்கிய 645 பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகள் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்றது.

நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் என 645 பணியிடங்களுக்கான தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 5 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 1,905 தேர்வு மையங்களில் இன்று தேர்வுகள் நடைபெற்றன.
பொது அறிவு பகுதியில் அறிவியலில் 7 கேள்விகளும், புவியியலில் 6 கேள்விகளும், வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கத்தில் 10 கேள்விகளும், அரசியலமைப்பில் 15 கேள்விகளும், பொருளாதாரத்தில் 10 கேள்விகளும், தமிழ் கலாச்சாரத்தில் 18 கேள்விகளும், நடப்பு நிகழ்வுகளில் 9 கேள்விகளும், திறனறி மற்றும் கணிதத்தில் 25 கேள்விகளும் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் சென்னை சேத்துப்பட்டு ஹரிங்டன் சாலை ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று தேர்வு மையத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குரூப் 2 தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் சுமுகமாக நடந்துள்ளது. சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 விண்ணப்பித்தனர். ஓஎம்ஆர் கேள்வித்தாள் முறையில் நடைபெறும் இத்தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு 7 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 6 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 பணியிடங்களில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. நேற்று கூடுதலாக 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
2026 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும். 2024 ஆம் ஆண்டு 10,701 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2025 ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் 9,725 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும், "வினாத்தாள் பல கட்டங்களாகத் தயாரிக்கப்பட்டு, பலமுறை பரிசீலனை செய்யப்படுகிறது. இருந்தாலும், மொழிபெயர்ப்பில் பிழை வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறுகளை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். பிழைகள் ஏற்படும்போது, மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசுப் பணியிடங்களையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருக்கிறோம்.
பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் உள்ள பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று அத்துறைகள் கேட்கும்போது, தேர்வு செய்து அளிக்கிறோம். அந்த வகையில், பல்கலைக்கழகங்களில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர் கல்வித்துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த பணியிடங்களும் நிரப்பப்படும். கலந்தாய்வு நடைபெறும்போது எந்தெந்த துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன என்ற விபரங்கள் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications