குரூப் 2, 2A தேர்வு எழுதுனீங்களா? அரசு வேலை கன்பார்மா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் அதற்கான உத்தேச விடைக்குறிப்பு (Tentative answer keys) வெளியாகியுள்ளது. நீங்கள் எழுதிய விடையும் இதில் உள்ள விடையும் சரியா என பார்த்து கூட்டி கழித்து பாருங்கள்.
டிஎன்பிஎஸ் மூலம் நடத்தப்பட்ட குரூப் 2 மற்று்ம 2 ஏ போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 19 ஆம் தேதியுடன் பெறப்பட்டன. குரூப் 2 வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களும் குரூப் 2 ஏ வில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2327 பணிகளுக்காக தேர்வு கடந்த 14 ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த குரூப் 2 தேர்வில் இந்தாண்டு நேர்காணல் கிடையாது. அதற்கு பதிலாக தேர்வு முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கு ஒரே முதல் நிலைத் தேர்வு மற்றும் தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த குரூப் 2 தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர்.இதற்கான விடைக் குறிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் டிஎன்பிஎஸ்சி தேர்வக்கான விடைக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.tnpsc.gov.in/ செல்ல வேண்டும். அங்கு Recruitment என்ற ஆப்ஷனின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிஸ்டில் Answer Key என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் தேர்வர்களின் பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்தநாள் ஆகியவற்றை கொடுத்துவிட்டு விடைக் குறிப்பை பார்க்கலாம்.

இந்த விடைக் குறிப்பை வைத்து நாம் எழுதிய விடைகளுடன் ஒப்பிட்டு சரியா தவறா, எத்தனை சரியான மதிப்பெண், நமக்கு அரசு பணி கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 2 முதல் 3 மாதங்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications