தமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்
சென்னை: தமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளை எழுத முடியும் என்கிற அளவில் மிகப்பெரிய மாற்றத்தை பாடத்திட்டத்தில் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
மொழிப்பாடம் நீக்கப்படுவதாக தகவல் வெளியானதையடுத்து பலரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளில் தமிழை நீக்கிவிட்டதாக கண்டித்து குரல் எழுப்பினர். ஆனால் டிஎன்பிஎஸ்சியோ நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.
நன்றாக பாருங்கள், நாங்கள் தமிழ் தெரிந்தால் தான் அரசு பணி என்ற நிலையை உருவாக்கி உள்ளோம் என்று பாடத்திட்டத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

இனி சாத்தியமில்லை
இதன்படி தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை இனி அறிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். முன்பு மொழிப்பாடத்தில் ஆங்கிலத்தை தேர்வு செய்து கூட வெற்றி பெற முடியும். இனி அதற்கு சாத்தியமே இல்லை.

பாடதிட்டம் மாற்றம்
குரூப் 2 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றுக்கு முதனிலைத்தேர்வும், முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

பாடதிட்ட விவரம்
முதனிலைத் தேர்வில் ஆப்ஜக்டிவ் டைப்பில் பொது அறிவு கேள்விகள், நாட்டு நடப்புகள், இந்தியாவின் நிலப்பகுதிகள். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாறு, இந்திய ஆட்சி அமைப்பு முறை, இந்திய பொருளாதாரம், இந்திய சுதந்திர போராட்டம், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அரசியல் நகர்வுகள், தமிழக அரசின் நிர்வாக மேலாண்மைகள், புத்திக்கூர்மை மற்றும் அறிவுத்திறன் (APTITUDE AND MENTAL ABILITY) ஆகிய தேர்வுகள் இடம் பெற்று இருக்கும்.

தமிழ் தெரிய வேண்டும்
முதன்மை தேர்வில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல், துல்லியமாக எழுதுதல், புரிந்து கொள்ளும் திறனறிதல், குறிப்புகளை வைத்து விரிவாக எழுதுதல், திருக்குறள், கடிதம் எழுதுதல் , தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு போன்றவை இடம் பெற்றுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications