குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுதும் நடக்கிறது.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனிக்க விஷயங்கள் இதுதான்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது.. மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த குரூப் 4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுதுகிறார்கள்.. இதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் செய்திருக்கிறார்கள்.. தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கியிருக்கிறார்கள்.
தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இன்று தேர்வு
அந்தவகையில், இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுதுகிறார்கள்.. ஆண்கள், 5,26,553 பேர், பெண்கள் 8,63,068 பேர், 117 மூன்றாம் பாலினத்தவர்கள் என 13,89,738 பேர் எழுத உள்ள நிலையில், 13,89,738 பேர் விண்ணப்பித்த நிலையில், 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 3,935 பணி இடங்களை நிரப்புவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம், 314 தேர்வு மையங்களில் இந்த குரூப் 4 தேர்வினை இன்று நடத்துகிறது.
விண்ணப்பங்கள்
இதற்காக, கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக எழுத்து தேர்வு இன்று சனிக்கிழமை நடக்கிறது.. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
குருப் 4 பணிக்கான தேர்வில் பகுதி 1 ல் தமிழ் மொழித் திறனை அறிவதற்கான தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும், பகுதி 2 ல் பொது அறிவு பிரிவில் 75 கேள்விகளும், திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு கண்காணிப்பாளர்கள்
தேர்வு கண்காணிப்பாளர்களாக 4922 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 94,848 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் 9 மணிக்குள்ளாக தேர்வு வளாகத்திற்கு வரவேண்டும். ஹால் டிக்கெட்கெட்டுடன், ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் தேர்வுகூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அத்துடன் அவர்களால் எப்போதுமே தேர்வும் எழுத முடியாது.
ஆள்மாறாட்டம்
ஆள்மாறாட்டம் உட்பட எந்த விதமான தேர்வு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர், தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார் என்பதெல்லாம் அடிப்படை விதியாகும்.
நேற்று திடீரென வினாத்தாள் கசிந்துவிட்டதாக செய்திகள் பரவின.. ஆனால், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்திருந்தார். அதில், வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை. வினாத்தாள்கள் பஸ்களில் எடுத்து செல்லும்போது போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications