டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வுகள்.. கட் ஆப் மார்க் எவ்வளவாக இருக்கும்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு நேற்று மாநிலம் முழுக்க சுமுகமாக நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு க்ரூப் 4 காலியிடங்களுக்கு கட் ஆப் மார் எதுவாக இருக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

க்ரூப் 4 காலியிடங்கள்: க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கட் ஆப் மார்க் எவ்வளவு: இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல எம்பிசி பிரிவில் ஆண்களுக்கு 143-146, பெண்களுக்கு 144-147, பட்டியலினத்தவர் பிரிவில் ஆண்களுக்கு 137-141, பெண்களுக்கு 139-142, பட்டியலினத்தவர் அருந்ததியினர் பிரிவில் ஆண்களுக்கு 133-137, பெண்களுக்கு 135-138, பழங்குடியினர் பிரிவில் ஆண்களுக்கு 132-135, பெண்களுக்கு 133-136 கட் ஆப் மார்க் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க் இல்லை.. கடந்த காலங்களில் நடந்த தேர்வுகள் அடிப்படையில் இந்த முறை கட் ஆப் எதுவாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் கணித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்தே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட் ஆப் மார்க் விவரம் தரப்பட்டுள்ளது.
கட் ஆப் எப்படி தீர்மானிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட் ஆஃப் மார்க்குகள் பல்வேறு காரணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.. இதில் முக்கியமானது எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் என்பதாகும். மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர் என்பது கட் ஆஃப் மார்க்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக பேர் விண்ணப்பித்தால் போட்டி காரணமாக கட் ஆஃப் மார்க் அதிகரிக்கலாம்.
அடுத்து காலியிடங்கள்.. எத்தனை காலியிடங்கள் இருக்கிறது என்பது கட் ஆப் மார்க்கை முடிவு செய்ய முக்கிய காரணமாக இருக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டே கட் ஆப் மார்க் முடிவு செய்யப்படும்.
எப்படி பார்க்கலாம்: ஏற்கனவே கூறப்பட்டது போல இது அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க் இல்லை. அதிகாரப்பூர்வ கட் ஆப் மார்க்கை இன்னும் சில காலத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்படும். கட் ஆப் விவரம் வெளியான பிறகு.. டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்குச் சென்று, அதில் உள்ள TNPSC Group 4 category-wise cutoff என்ற லிங்கை கிளிக் செய்தால் கட் ஆப் விவரங்களை நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications