டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியீடு! எழுத்து தேர்வு முடித்தவர்களா? அப்போ இது உங்களுக்குதான்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அரசு பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் தேர்வுகளுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் சில பதவிகளுக்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அந்த பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் / மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை TNPSC அதிகாரப்பூர் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதாவது, தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகள், தொகுதி IIIல் அடங்கிய பதவிகள் (தொகுதி III A பணிகள்), ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உளவியல் பேராசிரியர் மற்றும் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிகளுக்கு சமீபத்தில் எழுத்து தேர்வுகள் நடைபெற்றன. இது தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல பல்வேறு துணை சேவைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் (தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் மற்றும் பொது துணை சேவை) தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை மாதம் 25ம் தேதியுடன் முடிவடைந்திருந்த நிலையில், இந்த தேதியை செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி வரை தேர்வர்கள் தங்களது பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம்.
அதேபோல உதவி பயிற்சி அதிகாரி (ஸ்டெனோகிராபி- ஆங்கிலம்) & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் (ஜவுளி துறை) (தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி துணை சேவை மற்றும் தமிழ்நாடு பொதுத்துறை) தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிதான் இறுதி தேதியாக இருந்தது. ஆனால் தற்போது இது அக்டோபர் மாதம் 6ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக டெஹ்ராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர்வதற்கு(ஜூலை-2024 காலப்பகுதி) விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி இறுதி நாளாக இருந்தது. இந்த தேதியும் டிசம்பர் மாதம் 2ம் தேதி வரை சமீபத்தில் நீட்டித்து அறிவிப்பு வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ள https://www.tnpsc.gov.in/English/press_releases.aspx எனும் பக்கத்தையும் TNPSC அதிகாரப்பூர்வ தளத்தையும் பார்வையிடவும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications