TNPSC GROUP 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களை அதிகரித்த தமிழக அரசு! மொத்தம் எத்தனை தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதிதான் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் 213 இடங்கள் கூடுதலாக அதிகரித்துள்ளதால் 213 பேர் கூடுதலாக அரசு பணியில் இடம் பெறுவர்.

இவ்வாறு 213 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதன் மூலம் குரூப் 2 தேர்வுக்கான மொத்த பணியிடங்கள் 2540 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுகிறது.
குரூப் 2 ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறுகிறது. முதல்நிலைத் தேர்வு என்பது இரு தேர்வுகளுக்கும் ஒன்றாகவே நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான தகுதித் தேர்வு மட்டுமே.
முதல்நிலைத் தேர்வு 3 பகுதிகளாக நடைபெறுகிறது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும் 2ஆம் பகுதியில் திறனறி பகுதியில் 25 கேள்விகளும், மூன்றாம் பகுதியில் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும்.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. 3 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. முதன்மைத் தேர்வில் முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும். இரண்டாம் தாள் பொது அறிவு, இதுவும் 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு விரிவாக எழுத வேண்டும்.
குரூப் 2 ஏ பணிகளுக்கு இரு தாள்கள். முதல் தாள் தமிழ் மொழித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்கள். இரண்டாம் தாளில் 100 வினாக்கள், திறனறியில் 40 வினாக்கள், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 60 வினாக்கள் என 200 வினாக்களுக்கு நடைபெறும். 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications