இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவி.. டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
சென்னை: இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் பதவியில் காலியாக உள்ள 7 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கணினி வழி தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான கல்வி தகுதி, படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்
இப்பதவிகளுக்கு இணையதளம் www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்ய ஜனவரி 12ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 14ம் தேதி இரவு 11.59 மணி வரை காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ல் தேர்வு
இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 1ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(முதுகலைப்பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது.

கட்டாய தமிழ் மொழி தேர்வு
அதாவது பகுதி 'அ' வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு 10ம் வகுப்பு தரம), பகுதி 'ஆ' பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. கணினி வழி தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான கல்வி தகுதி, படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு
இதனிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர்(குரூப் 6) பதவி நியமனத்திற்காக 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வு மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications