TNPSC குரூப் 2 பதவிகளுக்கு வரும் 22 ஆம் தேதி பொது அறிவு முதன்மை தேர்வு.. வெளியானது ஹால் டிக்கெட்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் (TNPSC). குரூப் 2 பதவிகளுக்கு வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22 ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி 2 மற்றும் 2A பணிகள் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் 22.12.2005 அன்று வெளியிடப்பட்டது. அதில் தொகுதி-2 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள் - 2 பொது அறிவு விரித்துரைக்கும் வகை தேர்வானது 22.02.2026 அன்று நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) www.tnpsc.gov.in www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 38 மையங்களில் கடந்த 8 ஆம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெற இருந்தது. சென்னையில் தேர்வு மைய ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை நடத்த முடியாததால், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், வேறொரு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
அதன்படி, புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. பிப்.8-ம் தேதி நடைபெற இருந்த குரூப்-2, குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் (தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத் தாள்) ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த தேர்வுகளை மார்ச் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்.22 ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப்-2 பொது அறிவுத் தாள் தேர்வு, திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications