பாஜகவை ஓட விட்ட பெரியார் மண்.. தெறிக்கும் மீம்ஸ்.. வச்சி ஓட்டும் நெட்டிசன்ஸ் #TNRejectsBJP
Recommended Video
சென்னை: மொத்த இந்தியாவிலும், பாஜக முத்திரை பதித்து வெற்றிக் கொடி நாட்டி மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் ஒரு சீட்டும் பெற முடியவில்லை. ஏற்கனவே பதவி வகித்த கன்னியாகுமரி தொகுதியையும் இழந்துள்ளது.
இந்த நிலையில்தான், தமிழக நெட்டிசன்கள், #TNRejectsBJP என்ற டேக்கை சமூக வலைத்தளங்களில் போட்டு, அதில் தங்கள், நக்கல், நையாண்டிகளை பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாஜகவால் முத்திரை பதிக்க முடியவில்லை. இந்தியாவின் அடிப்பகுதி, அதாங்க அடித்தளம் ஸ்ட்ராங்காக இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று குதூகலிக்கிறார்கள், நெட்டிசன்கள்.
|
யாரும் கைப்பற்ற முடியவில்லை
மயூர்யா பேரரசு, டெல்லி சுல்தான்கள் காலம் மற்றும் ஆனானப்பட்ட முகலாயர் ஆட்சி காலங்களில் கூட, தெற்கே, அதிலும், தமிழக பகுதியை அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவர முடிவில்லை. இப்போது பாஜகவாலும் அது முடியவில்லை என மேப் போட்டு காட்டுகிறது இந்த மீம்.
|
மொட்டுதான் போல
தாமரை மலரும், மலரும் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவந்தனர் பாஜக தலைவர்கள். ஆனால், தாமரை மொட்டாகவே இருக்கிறது என்று சொல்கிறது இந்த ட்வீட்.
|
ஃபீல் தி பிஜிஎம்
பிரேமம் திரைப்படத்தில், ஹீரோ மற்றும் அவரது இரு நண்பர்கள், எப்படி ஹீரோயிசம் காட்டி ஒன்றாகவே இருப்பார்களோ, அதுபோலத்தான், தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள், வகுப்புவாதத்திற்கு எதிராக ஹீரோயிசம் காட்டுவதை போல சித்தரிக்கிறது இந்த அசத்தல் மீம். அப்புறம் என்ன "பல்லு கடிக்கனு.." பாட்டு பிஜிஎம் ப்ளே பண்ணிக்கோங்க மனசுக்குள்.
|
மீசையை முறுக்கு
வடிவேலு காமெடி காட்சி போலத்தான், எப்போதுமே, தமிழகம் மீசை முறுக்குவதும், பாஜக பயந்து அழுவதுமாகவே காட்சிகள் இருக்கின்றன என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.
|
கேம் ஆப் த்ரோன்
தெற்கு ராஜாங்கம் எப்போதும் சுதந்திரமாக இருக்கும் என்ற ஃபேமஸ், கேம் ஆப் த்ரோன் டயலாக்கை, தமிழகத்தின் தனித்தன்மையோடு நினைவுகூர்கிறார் இந்த நெட்டிசன்.
|
நிக்கல், நிக்கல்
இது திராவிட கோட்டை ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது தமிழ்நாடு மக்கள் To மோடி. இப்படி சொல்லி, காலா திரைப்படத்தில் வரும் காட்சியை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
வாய்ப்பில்ல ராஜா
உங்களோட மோசமான எதிரி, அவரது உச்சகட்ட காலத்தில் இருக்கும்போது கூட உங்களை எதிர்கொள்ள முடியாது.. என்ற ஃபேமஸ் டயலாக்கை பாஜகவின் தமிழக தோல்வியோடு ஒப்பிட்டுள்ளார் இந்த ட்வீட்டர்.
|
வார்னிங்
400 சீட்டே புடிச்சி ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடகாவோட நிப்பாட்டிக்கனும்.... தமிழ்நாட்டு பக்கமெல்லாம் 1சீட்டாவது வரனும்னு கனவுல கூட நினைக்ககூடாது...😂😆 இப்படி வடிவேலு காமெடியை உல்டாவாக்கி, பாஜகவை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications