சொந்த ஊர் செல்பவர்களுக்கு நிபந்தனைகளுடன் இ பாஸ் கோரி வழக்கு - ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
இ பாஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
சென்னை: சென்னையை விட்டு ஊரை காலி செய்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு இ பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தமிழக அரசு ஹைகோர்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இ பாஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இ பாஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார் அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் மனுதாரருக்கு அனுமதி அளித்தும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications