குர்கிராம் போல.. அல்டிமேட் தரத்திற்கு மாறப்போகும் மாமல்லபுரம்., பிரம்மாண்ட ஆபரேஷன்! இதை படிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்திற்கு அருகே புதிய துணைக்கோள் நகரத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த காலங்களில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் நியூ டவுன்கள், சாட்டிலைட் சிட்டிகள், உருவாக்கப்பட்டன. அந்த நகரங்கள் தற்போது பெரிய வெற்றியும் அடைந்து உள்ளன. டெல்லியிலும் குர்கிராம், நொய்டா போன்ற இடங்களில் இதேபோல் துணை கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டில் நியூ டவுன் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

 to get facelift: Will get a new satelite town soon under DMK Government project 2025

இந்த நிலையில்தான் செங்கல்பட்டில் மட்டுமின்றி மாமல்லபுரத்திலும் இதேபோல் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது.

மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது . விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.

அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சிங்கார சென்னை: ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

செங்கல்பட்டு நியூ டவுன் திட்டம் 2025: மாமல்லபுரம் மட்டுமின்றி சென்னைக்கு வெளியே நியூ டவுன் ஒன்றை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அருகே இந்த நியூ டவுன் அமைக்கப்பட உள்ளது. "A New Town Development Plan for Chengalpattu 2025 - 2045" என்ற பெயரில் அடுத்த 20 வருடங்களில் நியூ டவுன் அமைக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+