தமிழகத்தில் இன்று இரவு 9 மணிவரை கடைகள் இயங்கும்.. நாளை முழு ஊரடங்கு இல்லை- தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும் என்றும் அது போல் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் முடிகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது. இறப்பு எண்ணிக்கையும் 500 ஐ நெருங்கியது.
இதனிடையே கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை ஆகியவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், மருத்துவக் குழுவினர் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

முடிவு
அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் மே 24 முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஒரு வாரத்தில் காய்கறி கடைகள், பழக்கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இரவு 9 மணி வரை
இதனால் தமிழகத்தில் இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும். அது போல் தமிழகத்தில் ஞாயிறு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்
தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உணவகங்கள்
மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும்
அனுமதிக்கப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications