இன்று காங்.. நாளை பிற கட்சிகளுக்கு.. இதைமட்டும் பாஜக செய்தால்..இப்படித்தான் இருக்கும் புதிய இந்தியா
Recommended Video
சென்னை: ஆழமரமாக இருந்த காங்கிரஸின் ஆணிவேரை அசைத்துவிட்டது பாஜக.. காங்கிரசுக்கு செய்ததை ஒவ்வொரு மாநில கட்சிக்கும் பாஜக செய்ய ஆரம்பித்தால் எதிர்க்கட்சிகள் என்ற ஒன்று இந்தியாவில் அழிந்து போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போது இந்தியாவில் ஒற்றை மொழி மட்டுமல்ல ஒற்றை கட்சி, ஒற்றை ஆட்சி தான் நடக்கும்.
1975ம் ஆண்டுகளில் அப்போது காங்கிரஸ் தலைமையான ஒற்றை கட்சி ஆட்சி நடந்தது. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். அப்போது இந்திரா மிக வலிமையான தலைவராகவும், காங்கிரஸ் வலிமையான கட்சியாகவும் இருந்தது. அதன்பிறகு தான் காங்கிரஸ் மெல்ல மெல்ல வீழ்ச்சியை சந்தித்தது.
அதேநேரம் அந்தந்த மாநிலங்களின் உரிமை நலனை முன்னிறுத்தி புதிய கட்சிகள் முளைத்து வெற்றியும் பெற ஆரம்பித்தன. இப்படி ஒரு சூழலில் 1980 களில் 2எம்பிகளுடன் இருந்த பாரதிய ஜனதா இப்போது 300 எம்பிக்களை தாண்டி வென்றுள்ளது. பாஜகவைபோல் இந்தியாவில் எந்த கட்சியியும் இவ்வளவு வேகமாக எல்லா மாநிலங்களிலும் வளர்ந்தது இல்லை.

சரிந்து போன காங்கிரஸ்
அதேநேரம் 80களில் 300எம்பிக்களை வைத்திருந்த காங்கிரஸ் இப்போது 40, 50 என்ற ரீதியில் கடுமையாக சரிந்து கிடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. இதனால் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தலைவர் பொறுப்பில் இருந்தே விலகிவிட்டார்.

காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா
இப்போது அந்த கட்சிக்கு யார் தலைவர் என்பதே தெரியாத ஒரு திக்குத்தெரியாத நிலையில் உள்ளது இந்தசூழலை சரியாக பயன்படுத்திக்கொண்ட பாஜக திடீரென கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது.

பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள்
இதேபோல் கோவாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை மொத்தமாக வளைத்துவிட்டது. அங்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு 15 எம்எல்ஏக்களை பெற்று இருந்த காங்கிரஸ், இப்போது 10எம்எல்ஏக்களை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது.

மே.வங்கத்தில் மோசம்
முன்னதாக வார்டு கவுன்சிலர்கள் கூட இல்லாத திரிபுராவில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை பாஜகவில் சேர வைத்து அங்கு ஆட்சியையே பிடித்தது பாஜக. அஸ்ஸாம் உள்பட அனைத்து வடகிழக்கு மாநிலங்ளிலும் பாஜக இப்படித்தான் வளர்ந்துவிட்டது. இதேபோல் மேற்கு வங்கத்திலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மொத்தமாக வளைத்து அங்கு ஆட்சியை பிடிக்கும் நிலையில் பாஜக இருக்கிறது.

எதிர்க்கட்சியாக வளர்ந்தது
இதுஒருபுறம்எனில் தெலுங்கானாவில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் அம்மாநிலத்தை ஆளும் பாஜகவின் சிநேகித கட்சியான தெலுங்கானா ராஷ்டரிய சமிதிக்கு தாவிவிட்டனர். இதனால் அங்கு எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு நிலை உள்ளது. அங்கு எதிர்க்கட்சியாகும் அளவுக்கு பாஜக வந்துவிட்டது.

பாஜகவில் 4எம்பிக்கள் சேர்ப்பு
இதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுன் தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்பிக்கள் 4 பேரை அண்மையில் பாஜக வளைத்துக்கொண்டது. ஆந்திராவில் தங்களுக்கு நெருக்கமான ஜெகனிடம் வீழ்ந்து கிடக்கும் தெலுங்குதேசத்தின் தலைவர்களை மொத்தமாக பாஜக வளைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

ஒடிசா- கேரளாவில் அதிர்ச்சி
இதேபோல்தான் ஒடிவாவிலும் மிக வலிமையாக பாஜக வளர்ந்து வருகிறது. அங்கு அடுத்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் கேரளாவிலும் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று வலிமையாக மாறிவருகிறது. அங்கு வளர வாய்ப்பு உள்ளது.

அதிமுகவை காலி செய்ய வாய்ப்பு
பாஜகவால் வளருவதற்கான எந்தவிதமான வாய்ப்புகள் குறைவாக உள்ள ஒரு மாநிலம் என்றால் அது தமிழகமாகத்தான் இருக்கிறது. அதேநேரம் ஆளும் அதிமுக வலிமையற்று காணப்படுவதால், அதனை சில காய்நகர்த்தல்கள் மூலம் காலி செய்து அந்த இடத்திற்கு பாஜக வளரவும் வாய்ப்பு உள்ளது. இப்படி எல்லா மாநிலங்களிலும் பாஜக வளரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இப்போது பாஜக செய்து வருவதுபோல் எல்லா கட்சிகளுக்கும் செய்ய ஆரம்பித்தால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்பதே எதார்த்தம்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்











Click it and Unblock the Notifications