தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,236 பேருக்கு தொற்று.. 1,330 பேர் டிஸ்சார்ஜ்.. 13 பேர் உயிரிழப்பு..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,92,788 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொடக்கம் முதலே தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,330 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 7,70,378 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,822 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கொரோனா மட்டுமின்றி வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications