நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி மெரினாவில் பாஜக தர்ணா .. ஹெச் ராஜா,பொன் ராதா கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுத்தி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்து அங்கு வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.

today h raja dharna protest marina beach demand to nellai kannan arrest

அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறத. குறிப்பாக ள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது.

இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போலீசில் புகார் அளித்தார்கள்.அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

today h raja dharna protest marina beach demand to nellai kannan arrest

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுத்தி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அறிவித்தார். தன்னுடன் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் இல கணேசன் உள்ளிட்டோரும் தர்ணாவில் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று மெரினா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர். பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+