பொறுமைக்கு நீயே உதாரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பூமி தினம்.. இதையொட்டி ஒரு சின்னக் கவிதை

Today is Earth day

பொறுமைக்கு நீயே உதாரணம்

நீயே பொறுமையிழந்தாயோ

பொறுத்துப் பார்த்து காத்திருந்த உன்னை

நாங்கள்தான் ஏமாற்றினோமோ

உன்னை நேசிக்கவும் மறந்தோம்

நீயும் சுவாசிக்க வேண்டியதையும் மறந்தோம்

உன் மற்ற பிள்ளைகளையும் நேசிக்கவும் மறந்தோம்

அவற்றின் வாழ்வு எங்களின் இசைவில் மட்டுமே என்றே இருந்தோம்

உன் பிள்ளை எங்கள் மனித குலம் மட்டுமே என்ற இருமாப்புடன் சுயநலமாய் இருந்திட்டோம்

உன் மற்ற பிள்ளைகளான உயிரினங்களையும் தாவரங்களையும்

எங்களது சேவைக்கும் தேவைக்கும் அழித்தோம்

அதுவும் வகைதொகையின்றி

அதன் பலனாய் இன்று எங்களை வீட்டு சிறையில் விட்டு விட்டாயோ

உன்னை நினைவுகூற

செயற்கையாய் நாங்கள் இல்லாத அக்கறையினை

நாங்கள் வெளிக்காட்ட வேண்டாமென இந்த நாளை

நீயே கொண்டாடிடவும் சுவாசிக்கவும்

நீயாகவே செய்துவிட்டாயோ எங்கள் பூமித்தாயே

- ஆகர்ஷிணி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+