அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயில விருப்பமா! விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள்.. அப்ளை செய்வது ஈசி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள். கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாடு முழுவதும் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தின் கீழ் 54 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும், 3 இணைப்பு கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு கட்டண விலக்கு இருக்கிறது. பட்டைய படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் http://www.tnpoly.in/ எனும் தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இதில், தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். ஏற்கெனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கேற்ப புதிய சான்றிதழ் (சாண்ட்விச்) பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படுகிறது.
அதேபோல, 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கண்ணாடியிழை மூலம் 1 ஜிபிபிஎஸ் அளவிலான தொடர் இணையதள வசதி இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தவிர, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கெலமங்கலம், தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஆகிய 3 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில், பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிக்க செய்திருக்கிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாளாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications