ஆதார் அட்டையில் மாற்றம் செய்யனுமா? சீக்கிரம்! இன்றே கடைசி நாள்.. தவறவிடாதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாகிவிட்ட நிலையில், ஆதாரில் பதிவாகியுள்ள தகவல்களை திருத்தம் செய்ய அவ்வப்போது மத்திய அரசு கால அவகாசத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்தியாவில் ஆதார் கொண்டுவரப்பட்டதே பெரும் சர்ச்சைகளுக்கு இடையில்தான். தொடக்கத்தில் ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னாட்களில் இது அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆதாரில் வேறு ஒரு மொபைல் நம்பரை கொடுத்திருப்பீர்கள். ஆனால் தற்போது இந்த ஆதார் அட்டையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அல்லது புதிய செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

Today is the last day to change Aadhaar card

அதேபோல முகவரியிலும் இதே நிலைதான். தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியானது வேறாக இருக்கலாம், ஆனால் தற்போது முகவரி மாற்றமடைந்திருக்கலாம். எனவே இந்த மாற்றங்களை சரி செய்ய கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன் மூலம் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு சில எளிய முறைகளை பின்பற்றினால் போதுமானது.

முதலில், UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் சுய சேவை போர்ட்டலுக்குச் செல்லவும். அதில் உள்நுழைய OTP அவசியமாகும். எனவே பதிவு செய்த மொபைல் எண்ணை கையில் வைத்திருப்பது அவசியமாகும். இதில் எந்த எண்ணை கொடுத்தோம் என்பது தெரியாமல் இருந்தால் அதையும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

அதாவது, முதலில் https://myaadhaar.uidai.gov.in/ எனும் வெப்சைட்டை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அல்லது மொபைலில் mAadhaar அப்ளிகேஷன் இருந்தால் அதையும் ஓபன் செய்துகொள்ளலாம். இப்படி ஓபன் செய்தவுடன் Welcome to MyAadhaar என நீல நிறத்தில் ஓரு பேஜ் ஓபனாகும். அதை தாண்டி அப்படியே கீழே வந்தால் Download Aadhaar, Order Aadhar PVC Card என சில ஆப்ஷன்கள் இருக்கும். இதில் 8வதாக Verify Email/Mobile என ஓரு ஆப்ஷன் காட்டும். இதை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பின்னர் ஓபனாகும் பேஜில் Verify Mobile Number மற்றும் Verify Email Address என இரண்டு ஆப்ஷன் காட்டும். நீங்கள் இதில் எதை சரிபார்க்க வேண்டுமோ அதை பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து மூன்று லைன்கள் இருக்கும். அதில், முதலில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் செக் செய்ய வேண்டிய மொபைல் எண் மற்றும் கேப்சாவை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இறுதியாக Send OTP என ஒரு பட்டன் இருக்கும்.

Today is the last day to change Aadhaar card

அதனை கிளிக் செய்தால் நீங்கள் இங்கு குறிப்பிட்ட எண்தான் ஆதாரில் பதிவாகியிருக்கிறது எனில் அந்த எண்ணுக்கு ஓடிபி செல்லும். அதேநேரம் இந்த பேஜில் பச்சை நிறத்தில் ஒரு மெசேஜ் வரும். இல்லையெனில் சிவப்பு நிறத்தில் நீங்கள் சரியான மொபைல் எண்ணை பதிவு செய்யவில்லை என்று ஒரு பாப்அப் போல குறுஞ்செய்தி வரும். இப்படியாக நம்முடைய பழைய மொபைல் எண் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல முகவரி மாற்றத்திற்கும், இமெயில் மாற்றத்திற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன. முகவரி மாற்றத்திற்கு https://uidai.gov.in/ எனும் வெப்சைட்டில் நுழைய வேண்டும். இதில் நுழையும்போதே எந்த மொழியில் இந்த தளத்தை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று கேட்டும் அதில் தமிழல் அல்லது ஆங்கிலம் கிளிக் செய்தால் போர்டலுக்குள் சென்றுவிடும்.

ஆங்கிலம் எனில், My aadhaar எனும் ஆப்ஷனை கிளிக் செய்து Update Demographics Data online எனும் மற்றொரு ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும். அதில்தான் தங்களை லாகின் செய்யுமாறு கேட்கும். லாகின் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். இதைக்கொண்டு லாகின் செய்யலாம். கடைசியாக Proceed to update aadhaar எனும் ஆப்ஷனை கிளிக் செய்து முகவரியில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

இமெயில் ஐடியை மாற்றம் செய்வதற்கும் இதே வழிமுறைதான். https://uidai.gov.in/எனும் வெப்சைட்டில் நுழைய வேண்டும், மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் Book an Appointment எனும் ஆப்ஷனை கிளிக் செய்து லொகேஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதில் ஆதாரில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைதான் கொடுக்க வேண்டும் என்று கிடையாது.

ஓடிபி வந்த பின்னர் அதை கொண்டு உள்ளே நுழைந்தால் எதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டும். அங்கு இமெயில் என்பதை கிளிக் செய்து, புதிய இமெயில் ஐடியை கொடுக்க வேண்டும். இப்படியாக மாற்றம் செய்யலாம்.

மற்றொருபுறம் குழந்தைகளுக்கான ஆதார் அட்டையிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும். அதாவது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இருப்பின் குழந்தையின் பயோமெட்ரிக் பதிவை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும். குழந்தைக்கு 5 வயது கடந்த பின்னர் ஒருமுறையும், பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மற்றொரு முறையும் இதனை புதுப்பிக்க வேண்டும். இதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+