"பவர் கட்.." சென்னையில் இந்த முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கா
சென்னை: இந்த வாரத்தின் முதல் வேலை நாளான இன்று தலைநகர் சென்னையில் எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது என்பது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாகவே இருக்கிறது. மாநிலத்திற்குத் தேவையான மின்சாரம் போக மற்றதை ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி இருக்கிறது.
இதனால் மின் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு என்பது எங்கும் இல்லை. அதேநேரம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாகக் குறிப்பிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரம் இருக்காது: அதன்படி சென்னையில் கிண்டி, மயிலாப்பூர், தாம்பரம் பகுதிகளில் இன்று இந்த குறிப்பிட்ட இடங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பராமரிப்பு பணிகள் விரைவாக முடிந்தால் சீக்கிரம் மின் சேவை சீரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் வேலை நாளான இன்று மின்சாரம் இருக்காது என்பதால் இந்தப் பகுதிகளில் இருப்போர் அதற்கேற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
அதன்படி கிண்டி பகுதியில் நங்கநல்லூர் 5வது மெயின் ரோடு, குளக்கரை ரோடு, காலேஜ் ரோடு மூவரசன்பேட்டை கண்ணன் நகர், விக்னேஸ்வரா நகர் 1 முதல் 3வது தெரு, பெருமாள் நகர் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்று மின் சேவை இருக்காது.
மயிலாப்பூர், தாம்பரம்: மேலும், மயிலாப்பூர் பகுதியில், ஃபோர்ஷோர் எஸ்டேட் விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்புகள், குட்சேரி சாலை, தேவாதி தெரு, கிரிஜா கார்டன் என அதைச் சுற்றியுள்ள இடங்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தாம்பரம் பகுதியில் டி.என்.எஸ்.சி.பி. பிளாக் 1 முதல் 152 வரை, பாரதி நகர் டிஎல்எஃப் பெரும்பாக்கம் குவார்ட்டர்ஸ் 126 பிளாக் பெரும்பாக்கம் வரதாபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், மால்கள், காசாகிராண்ட் சித்தாலபாக்கம் கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி இணைப்பு சாலை, பவானி நகர், ஐஸ்வர்யா தோட்டம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கே.கே. நகர் பகுதியில் கோடம்பாக்கம் விஓசி 1ஆவது பிரதான சாலை, விருகம்பாக்கம் ஜெயின்ஸ் அபார்ட்மென்ட், அருணாச்சலம் சாலை பி.டி. ராஜன் சாலை சுப்பராயன் நகர் 8வது தெரு, பஜனை கோயில் தெரு அரும்பாக்கம், சௌராஸ்த்ரா நகர் 1வது தெரு ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும்.
வட சென்னையில் எங்கே மின்சாரம் இருக்காது: வட சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், எச்.டி சர்வீஸ், திருப்பதி நகர், சுபாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இன்று இருக்காது.
சென்னை ஆவடியில் பட்டாபிராம் பாரதியார் நகர், ஐ.ஏ.எஃப். சாலை, கக்கன்ஜி நகர், காந்தி நகர் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மின் பராமரிப்பு பணிகள் விரைவாக முடிந்தால் அதற்கேற்ப விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications