"பவர் கட்!" அடையாறு, தாம்பரம், கிண்டி.. முக்கிய பகுதிகளில் இன்று 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை நகரில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தலைநகர் சென்னையில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கே மின் சேவை நிறுத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு இருக்கும் என்றும் பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் விரைவாக மின் வினியோகம் தொடங்கும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார சப்ளை பாதிப்பு: மயிலாப்பூரில் ஃபோர்ஷோர் எஸ்டேட் சாந்தோம் ஹைரோடு, டிமான்டி தெரு, டூமிங் குப்பம், ஜெபமாலை சர்ச் சாலை, முத்து தெரு, நொச்சிக்குப்பம், சோலையப்பன் தெரு, வி.சி கார்டன், நல்லப்பன் செயின்ட் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
அதேபோல தாம்பரம் பகுதியில் பள்ளிக்கரணை, அசாம் பவன், ஒடிசா பவன், சீனிவாசா நகர், சி.டி.எஸ்., வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.வி. டவர்ஸ், ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், பெரியார் நகர், ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், செஞ்சனியம்மன் கோவில் தெரு, சஞ்சீனியம்மன் கோவில் தெரு, எஸ்.ஜி.பி. ஹையர் தெரு, பவானியம்மன் கோவில் தெரு, பெல் பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை, சிவசங்கர் தெரு, அம்மன் கோயில் தெரு மின்சாரம் இருக்காது
கண்ணதாசன் தெரு, உமா நகர், எஸ்.வி.நகர் பம்மல் திருவள்ளுவர் நகர், எச்.எல் காலனி, ஈரட்டட்டி பிள்ளையார் கோயில் தெரு, ஏழுமலைப் பேராலய சாலை, பம்மல் சாலை , திருசூலம் பகுதி, காவல் நிலையம், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, மசூதி தெரு கடப்பேரி ராதா நகர், நேரு நகர், பழைய ஹஸ்தினாபுரம், ராஜாஜி தெரு பெரும்பாக்கம் காசா கிராண்ட் அபார்ட்மென்ட், மெர்குரி அபார்ட்மென்ட், காந்தி நகர் புதுதங்கால் கக்கன் தெரு, படேல் தெரு, மங்களபுரம், மேடம் தெரு, வாக்நகர், மேடம் தெரு ஆகிய இடங்களில் மின் சேவை பாதிக்கப்படும்.
அடையாறு & ஐடி காரிடார்: அடையாரில் பெசன்ட் நகர் தரமணி, நேரு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, பெரியார் தெரு, டிஎம் மாஸ்திரி தெரு, மகாலட்சுமி அவென்யூ, வேளச்சேரி 100 அடி சாலை, வசந்தா அபார்ட்மென்ட், ராமராஜ் காட்டன் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சாரம் இருக்காது. ஐடி காரிடாரை பொறுத்தவரை எழில் நகர் பாலமுருகன் காலனி, சுங்க காலனி, தேவராஜ் நகர் பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்படும்.
கிண்டி பகுதியில் ஆர்எம்டி யார்டு, எம் பிளாக் ஆலந்தூர் எம்கேஎன் சாலை. ராஜா தெரு, ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பல்லனியம்மன் கோயில் நங்கநல்லூர் லட்சுமி நகர், ஐயப்பா நகர், கே.கே.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
போரூரில் திருமுடிவாக்கம் சிட்கோ 7வது பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலை, கலைஞர் தெரு ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது. அம்பத்தூரை பொறுத்தவரை அண்ணாநகர் பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, மேட்டுத் தெரு ஜேஜே நகர் செரியன் மருத்துவமனை, கிருஷ்ணா நகர், பாலு நகர் திருவேற்காடு சன்னதி தெரு, பெருமாள் அகரம், எம்ஜிஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications