மீண்டும் பாஜகவுக்குதான் அரியணை.. 350 இடங்களை அள்ளும்! இந்த முறையும் பலிக்குமா சாணக்யா எக்ஸிட் போல்?
Recommended Video
சென்னை: டுடே சாணக்யா கருத்து கணிப்பில் பாஜக அணி 340 இடங்களுடன் ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கிய ஜனநாயக திருவிழா இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து எக்ஸிட் போல்கள் வெளியிடப்பட்டன.
டைம்ஸ் நவ், நியூஸ் 18, சிஎன்என் ஐபிஎன், ரிபப்ளிக் சிஓட்டர் உள்ளிட்ட அனைத்து சேனல்களின் கருத்துக்கணிப்பும் பாஜகவுக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இந்நிலையில் டுடே சாணக்யா கருத்துக்கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணிக்கு 350
டுடே சாணக்யா கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 350 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களையும் இதர கட்சிகள் 97 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 55
தனித்து பார்த்தோமேயானால் பாஜக 300 இடங்களில் வெற்றி பெறும் என்று சாணக்யா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 55 இடங்களில் வெல்லும் என்றும் இதரக்கட்சிகள் 97 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலித்த கருத்துக்கணிப்பு
கடந்த 2014- தேர்தலில் டுடே சாணக்யாவின் கருத்து கணிப்பின்படியே தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக
கூட்டணி 340 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என கூறியிருந்தது சாணக்யா கருத்துக்கணிப்பு.
|
இம்முறையும் பலிக்குமா?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 341 இடங்களை கைப்பற்றியது. டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக்கணிப்பு நிஜமான நிலையில் இந்த தேர்தலில் சாணக்யாவின் கருத்துக்கணிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த முறையும் பாஜகதான் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என கூறியிருக்கிறது டுடேஸ் சாணக்கியா.


Click it and Unblock the Notifications
