இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்.. கிராமங்களில் திருவிழாக்கோலம்
சென்னை: தைப்பொங்கல் நாளின் மறுநாளான இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் கிராமங்கள் அனைத்திலும் இன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிகளும் இன்று நடைபெறும்.
தைப்பொங்கலுக்கு மறுநாளான இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மாடு மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.. உழவுக்கு உயிரூட்டும் கால்நடைகளுக்கு இந்த நாளில் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இருக்கும்.

இன்று மாட்டுப்பொங்கல் என்பதால், மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்வார்கள். மேலும் தங்களுடைய கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி அழகுபடுத்துவார்கள். அத்துடன் கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவதும் பல ஊர்களில் வழக்கமாக உள்ளது. மேலும் கழுத்துக்கு தோலினாலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவிப்பார்கள்.
மேலும் தங்களுடைய உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளுக்கும் இதேபோல சந்தனம், குங்குமம் வைப்பார்கள். பின்னர் ஒரு பெரிய தட்டில், பயிர், தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடப்படுகிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications