தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இல்லை
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி முகாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் 6ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் வியாழக்கிழமை ஆயுத பூஜை, வெள்ளிக்கிழமை விஜயதசமி என்பதால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் முகாம் நடத்தினால் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாக இருக்கும்.
அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட 5 கட்ட முகாம்கலில் 1.10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ரத்து செய்யப்பட்ட 6ஆவது கட்ட தடுப்பூசி வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. எனினும் இன்றைய தினம் வழக்கமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
-
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி












Click it and Unblock the Notifications