Today gold rate: தங்க நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. சவரனுக்கு ரூ. 320 குறைந்த தங்கம் விலை
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூபாய் 800 உயர்ந்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ. சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ரூபாய் 320 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 66,400க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.66,160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காசா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போர் சூழல், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது போன்ற காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

போர் பதற்றம் மற்றும் டிரம்ப் பதவியேற்பு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. அன்று முதல் தொடர்ந்து பல புதிய உச்சங்களை தங்கம் எட்டி வருகிறது.
சென்னையில் மார்ச் 12 ஆம் தேதி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 8,065, ஒரு சவரன் ரூ. 64,520 என விற்கப்பட்ட நிலையில், மார்ச் 13 ஆம் தேதி சவரனுக்கு ரூ.440 விலை உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ. 8,120 ஆகும், ஒரு பவுன் ரூ. 64,960 ஆகவும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 14 ஆம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. அதே நாளில் மதியம் மீண்டும் தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 1,440 உயர்ந்தது.
மார்ச் 15 ஆம் தேதி கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220 ஆகவும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 16 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.65,760 ஆகவும், மார்ச் 17 ஆம் தேதி 80 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 65,680க்கும், மார்ச் 18 ஆம் தேதி ஒரே அடியாக 320 ரூபாய் விலை உயர்ந்தது. மார்ச் 19 ஆம் தேதி மீண்டும் ரூபாய் 320 அதிகரித்து ஒரு சவரன் ரூ 66,320 க்கு விற்பனையானது.
அதைத்தொடர்ந்து, மார்ச் 20 ஆம் தேதியான நேற்று மீண்டும் தங்கம் விலை ரூபாய் 160 அதிகரித்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ. 66,480-க்கு விற்பனையானது. அதேபோல, கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,310-க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்?
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூபாய் 800 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ. 66,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 40 விலை உயர்ந்து ரூ. 8,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே அடியாக சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
21.03.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025 (நேற்று) - ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025 ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025 ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025 ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025 ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025 ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025 (பிற்பகல்) ஒரு சவரன் ரூ.66,400
14.03.2025 (காலை) ஒரு சவரன் ரூ.65,840
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520












Click it and Unblock the Notifications