சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்!
சென்னை: சென்னை போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் சாலையில் இயங்கி வரும் சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண கொள்ளைக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் 2018-ல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல்கேட்டை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கினர்.

இது தொடர்பான வழக்கில் பண்ருட்டி வேல்முருகன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் சாலையில் உள்ள சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.
கடந்த வாரம் கால் டாக்சி ஓட்டுநர் ஒருவருக்கும் இந்த சுங்க சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இன்று சுங்க சாவடி அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications