யப்பா! தக்காளி விலை ஒருவழியாக குறைந்தது.. கிலோ ரூ 20க்கு விற்பனையாமே.. எங்கே தெரியுமா?
சென்னை: சென்னையில் பொடி தக்காளியின் விலை கிலோ ரூ 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. சில்லறை விலையில் ரூ 200 வரை சென்றது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் வரத்தும் குறைந்து விட்டது. தக்காளியை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய போலீஸை பணிக்கு அமர்த்திய சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அது போல் தக்காளி விவசாயிகளில் பலர் லட்சாதிபதிகளாகிவிட்டனர்.
கிலோ தக்காளி வெறும் ரூ 20, 30 க்கு இருந்த நிலையில் தற்போது ரூ 170 வரை விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நூற்றுக்கணக்கில் தக்காளி லாரிகள் வந்த நிலையில் வரத்து குறைவால் 30 , 40 என்ற இரட்டை இலக்க எண்ணிக்கையிலேயே தக்காளி லாரிகள் வந்தன.
இந்த தக்காளியை வைத்து மீம்ஸ்கள் களைகட்டின. சிகப்பு தங்கம் என வர்ணிக்கப்பட்டன. சேலத்தில் ஒரு தக்காளி மார்க்கெட்டில் சிசிடிவி கேமரா போட்டு தக்காளி திருடு போவதை தடுப்பதாக செய்திகள் வெளியாகின. வடமாநிலத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வரும் தம்பதியில் கணவர் சமையலுக்கு கூடுதலாக தக்காளி பயன்படுத்தியதால் மனைவி சண்டையிட்டுக் கொண்டு வெளியேறிவிட்டார்.
இது போல் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏழை எளிய மக்களை மட்டும் அல்லாமல் பணக்காரர்களையும் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தக்காளியின் விலை தினந்தோறும் கிலோ 10, 20 என விலை குறைந்து வந்தது. நேற்றைய தினம் கிலோ தக்காளி ரூ 90 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றைய தினம் கிலோ தக்காளியின் விலை ரூ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் பொடி தக்காளி, அதாவது பார்ப்பதற்கு இலந்தை பழம் சைஸில் உள்ளது. அந்த தக்காளி கிலோ ரூ 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். மேலும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது. நாளைக்கு எங்கே தக்காளி விலை கூடிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் கடைகளில் தக்காளியை வாங்கி வருகிறார்கள்.
அதோ போல் சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட இதர காய்கறிகளின் விலையும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இந்த தக்காளி விலையேற்றத்தால் மக்கள் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி வந்தார்கள். பல யூடியூபர்களும் தக்காளி இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்பதற்கான டிப்ஸ்களை கொடுத்தார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications