பதறியடித்து கூகுளில் தேடிய மக்கள்.. தக்காளி விலை ஏறுனதும் என்ன பண்றாங்க பாருங்க - வைரல் சர்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏறிய நிலையில் நெட்டிசன்கள் சிலர் கூகுளில் வித்தியாசமான தேடல்களை மேற்கொண்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்து வருகிறது. 2 வாரத்திற்கும் மேலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டை தாக்கிய இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடமாவட்டங்கள், சென்னை அதிகம் பாதிக்கப்பட்டது.

பாதிப்பு

பாதிப்பு

அதேபோல் ஆந்திராவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆந்திராவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில்தான் ஆந்திராவில் இருந்து வரும் தக்காளிகளை, தமிழ்நாட்டில் விளைய வைக்கப்பட்ட தக்காளிகளும் மழையில் நாசம் ஆகியுள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

சந்தைகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து பல இடங்களில் ஒரு கிலோ ரூ. 150க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் 200 வரையில் கூட ஒரு கிலோ விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 -200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சர்ச்

சர்ச்

இந்த நிலையில் தக்காளியை வைத்து நிறைய மீம்கள் போடப்பட்டு வருகின்றன. முன்பு வெங்காய விலை உயர்வை வைத்து மீம்ஸ் போடுவது போல இப்போது தக்காளியை வைத்து மீம்ஸ் போடப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏறிய நிலையில் நெட்டிசன்கள் சிலர் கூகுளில் வித்தியாசமான தேடல்களை மேற்கொண்டு உள்ளனர். பல தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று தேடி உள்ளனர்.

Recommended Video

    உயரும் காய்கறி விலை.. | Vegetable Price In Chennai | Oneindia Tamil
    தக்காளி

    தக்காளி

    தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி, சட்னி செய்வது எப்படி என்றெல்லாம் கூகுளில் தேடி வருகின்றன. அதேபோல் குறைவான விலையில் குழம்பில் பயன்படுத்தும் தக்காளி சாஸ் குறித்தும் பலர் தேடி உள்ளனர். மேலும் தக்காளிக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம் என்று கூகுளில் கடந்த 2 நாட்களில் பலர் தேடி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+